1/02/2013

வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள்வோம்

அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நண்பர்களே வாருங்கள் வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள்வோம். நம் அனைவரின் வாழ்கையும் எதோ ஒரு விதத்தில் எந்திரத்தனமாக மாறிக்கொண்டுவருகிறது. பலருடைய ஓட்டம் தடம் மாறி ஓடிக்கொண்டுள்ளது, இன்னும் பலர் எந்த திசை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் பயணிக்கிறோம். நாம் எங்கே தொடங்கினோம், எங்கே இருக்கிறோம் என்றேனும் நினைத்து பார்த்தது உண்டா இல்லை அதற்காக நேரம் ஒதுக்கியது  உண்டா? என்றால் இல்லை என்பதே நம்மில் பலரின் பதில். இன்னும் சிலர் இலக்குகளை நாளுக்கு நாள் மாற்றி பயணிக்கிறார்கள்..
சந்தோசமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை பார்க்கும் போது நாமும் அப்படியே குழந்தையாக இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது..அது முடியாது!!!ஆனால் ஒன்று மட்டும் நம்மால் முடியும், ஆம் நாமும் குழந்தையாகவே இந்த உலகத்தை பார்க்கலாம்...அப்படி பார்த்தல் நிச்சயமாக நம் வாழ்க்கை ஒரு சோலைவனமாக மாறும், ஒவ்வொரு மணித்துளியையும் ரசிக்கும் மனிதர்கள் நாம் என்பதில் சந்தேகமில்லை!!!