12/27/2012

பரிசு

பயணப்பாதையில் பார்வை கவரும் பூக்களை
பத்திரப்படுத்திக்கொள்கிறேன் கண்களுக்குள்
உன்னை பார்த்த மாத்திரத்தில் பரிசளிக்க !!!

First Year Wedding Anniversary

முதல் நாள் போல இருக்குது
எதுவோ சொல்ல மனம் துடிக்குது
நிழல்கள் நிஜமாகி வருடம் ஆகுது
கனவில் வந்தவள் என்னருகில் இருப்பது
கடவுள் தந்த வரமிது!!!

என் நண்பன் போல இருக்கிறாய்
என்னுடன் நிழல் போல வருகிறாய்
காதலில் கரைய கற்று கொடுக்கிறாய்
என் துன்பத்தை தொலைவில் வைக்கிறாய்
நேசம் தந்து பாசம் வளர்த்து செல்கிறாய்!!!

மனசு

என் மனம் உன் மனம்
தனித்து நின்றால் இரு மனம்
சேர்ந்து நின்றால் ஒரு மனம்
சேர்ந்தது பிரிந்தால் வெறு மனம்