வாய் திறந்து பேசினால்
வார்த்தைக்கு வலிக்கும் என்று
கண்களால் மட்டுமே பேசுகிறாயே கள்ளி
உன் கண்கள் பேசும் வார்த்தைகளின்
வலி தாங்காமல் போன
வாலிப இதயங்கள் உனக்கு
வைத்த பெயர்தானோ சதிகாரி !!!
சதிகாரியே அந்த
வாலிப இதயங்களுக்கு மட்டும்
வாய் இருந்தால் இன்று
கல்லரையில் காதல் பாஷை
பேசும் தாஜ்மகாலே நீதான் என்று
கற்பனைக்கும் எட்டாத கவியொன்றை
பாடித்தான் செல்லுமே !!!

பாமரனாய் பிறந்ததற்கு தனை
நிதம் நொந்த அந்த
வாலிப இதயங்கள் உன்
ஒய்யாரப் பார்வையால் இனி
வானத்திலே மிதந்திடும்
மாயாஜாலத்தை கற்றிடுமே!!!
உன் சிங்காரப் பார்வையில்
சிக்கிக்கொண்ட மனது
சர்வாதிகாரி ஹிட்லரிடம்
சொல்லியாவது சதிகாரி உன்னை
தன் இதயக்கோயிலில்
சிறையெடுக்க தவித்திடுமே!!!
உன் ஓரக்கண் பார்வைக்கு
கட்டுண்ட நெஞ்சம் ஒருகோடி
பட்டாம்பூச்சி பறக்கும் நந்தவனமாக
தன் இதயத்தை மாற்றி உன்னை
ஊஞ்சலாட்ட துடித்திடுமே!!!
சதிகாரியே நீயென்றாலும்
உன் காண்பார்வையில்
படுதலே கதியேனும்
கண்ணாமூச்சி ஆட்டத்தை
கணநேரமும் ஆடிடுமே!!!








என்ன என்கின்ற விரக்தி
ஏன் என்று கேட்காத அறியாமை
ஐயம் உள்ள நபர்கள் மீது ஐயமற்ற நம்பிக்கை
ஒவ்வாத நட்பு
ஓயாத மனக்கசப்பு
ஒளவை சொல் கேளாத உலகம்
ஃறிணை மீது காதல்!!!
ஓவ்வொரு விடியலும்
ஒரு அர்த்தத்துடன்தான் விடிகிறது
உன் வாழ்க்கைக்கு மட்டும்அர்த்தமில்லாமல் போய்விடுமா என்ன???
வாழ்க்கை ஒருவருக்கு ஒருமுறை தான், அதை
வாழவிடாமல் தடம்புரட்டி,
உன்னை இடம் தெரியாமல்செய்துவிடும்,
இந்த தீவீரவாதத்தின் மீது
உனக்கென்ன காதல்????
ரோஜாவிற்கு முட்கள் உண்டு, ஆனால்
மனிதர்கள் விரும்புவது ரோஜாவின் இதழ்களை தான், அதுபோல
மனிதம் விரும்புவது உன் வளர்ச்சியை தானே அன்றி
வீழ்ச்சியை அல்ல!!!!
வீழ்ந்து கிடப்பது மடமை தான், ஆனால்
தீவிரவாதம் நீ எழுந்து நிற்பதற்கு
ஊன்றுகோள் அல்ல!!!
நட்பு என்னும் பெயரால் முகமூடிபோட்டு
தீவிரவாதம் நடத்துவதை நீயாகவே நிறுத்திக்கொள்
அதன் தாக்கம் தாளாமல் நீ அழிந்துபோவாய்!!!!
நாங்கள் விரும்புவது உன் அழிவை அல்ல
தூய்மையான நட்பை மட்டுமே!!!!
